September 27, 2022

நோக்கியாவின் மூன்று அசத்தலான
லேப்டாப் மாடல்கள் அறிமுகம்

மும்பை, செப்.6

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நடைபெற்று வரும் 2022 ஐஎப்ஏ நிகழ்வில் யஹச்எம்டி கு¼ளாபல் நிறுவனம் நோக்கியா பியுர்புக் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. பியுர்புக் சீரிசில் மொத்தம் மூன்று லேப்டாப்கள் அறிமுகமாகி இருக்கின்றன. இவை நோக்கியா பியுர்புக் போல்டு, நோக்கியா பியுர்புக் லைட் மற்றும் நோக்கியா பியுர்புக் ப்ரோ என அழைக்கப்படுகின்றன.

நோக்கியா பியுர்புக் போல்டு மற்றும் பியுர்புக் லைட் மாடல்களில் 14 இன்ச் டிஸ்ப்ளே, பியுர்புக் ப்ரோ மாடலில் 15.6 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. போல்டு மற்றும் லைட் மாடல்களில் இண்டெல் பெண்டியம் சில்வர் N6000, பியுர்புக் ப்ரோ மாடலில் இண்டெல் கோர் ஐ3 1220பி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

மூன்று லேப்டாப் மாடல்களிலும் எப்எச்டி ஐபிஎஸ் ஸ்கிரீன், 60யஹர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 1920×1080 பிக்சல் ரெசல்யூசன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல்களில் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், கைரேகை சென்சார், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் போல்டு மற்றும் லைட் மாடல்களில் 128 ஜிபி எஸ்எஸ்டி, பியுர்புக் ப்ரோ மாடலில் 512 ஜிபி எஸ்எஸ்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

லைட் மற்றும் போல்டு மாடல்களில் 44 வாட் பவர் அடாப்டர் வழங்கப்பட்டு உள்ளது. 14 இன்ச் மாடல்களை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் எட்டு மணி நேரம் வரை பயன்படுத்தலாம். நோக்கியா பியுர்புக் சீரிஸ் விண்டோஸ் 11 ஒஎஸ் கொண்டிருக்கிறது. இதன் ப்ரோ மாடலில் நான்கு ஸ்பீக்கர் சிஸ்டம், சிறிய மாடல்களில் 2 ஸ்பீக்கர் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

Spread the love