December 9, 2022

நேரடி வங்கி பண பரிமாற்றத்தால்
ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் சேமிப்பு
ஊழல் தடுப்பு வார விழா நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு

PM addressing at the programme marking Vigilance Awareness Week of Central Vigilance Commission (CVC), in New Delhi on November 03, 2022.

புது தில்லி, நவ.3

புதுதில்லி விக்கியான் பவனில் நடைபெற்ற மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் ஊழல் தடுப்பு வார விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் புதிய புகார் மேலாண்மை முறையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சர்தார் படேலின் பிறந்த தினத்துடன் ஊழல் தடுப்பு கண்காணிப்பு வாரம் தொடங்கியதாக கூறினார். சர்தார் படேல் தமது வாழ்க்கையை நேர்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் அர்ப்பணித்தார் என்றும் இதன் மூலமே பொதுச்சேவை முறை கட்டமைக்கப்படுவதாக தெரிவித்தார். விழிப்புணர்வு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான இயக்கம் இந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஊழல் இல்லாத இந்தியாவின் எதிர்ப்பார்ப்புகளையும், கனவுகளையும் உணரும் வகையில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு வார இயக்கம் கடைப்பிடிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். அனைத்து குடிமக்களின் வாழ்வாதரத்தின் முக்கியத்தும் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்காக செங்கோட்டையில் இருந்து தாம் உரையாற்றியது குறித்து குறிப்பிட்ட பிரதமர், ஊழலுக்கும், மக்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பதற்கும் இரண்டு முக்கியக் காரணங்களைச் சுட்டிக் காட்டினார். அதாவது, வசதி பற்றாக்குறை மற்றும் அரசிடமிருந்து தேவையற்ற அழுத்தம். மிக நீண்ட காலமாக, இந்த வசதிகள் மற்றும் வாய்ப்புகள் இல்லாதது வேண்டுமென்றே உயிர்ப்புடன் வைக்கப்பட்டு, ஒரு இடைவெளியை விரிவுபடுத்த அனுமதிக்கப்பட்டது,

ஆரோக்கியமற்ற போட்டிக்கு வழிவகுத்ததாக தெரிவித்தார். இது ஊழலுக்கேற்ற சூழலுக்கு வழிவகுத்தது. இந்த பற்றாக்குறையால் ஏற்படும் ஊழல் ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகவும் பாதிப்பதாக கூறினார். “ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அடிப்படை வசதிகளுக்காக தங்கள் சக்தியைச் செலவிட்டால், நாடு எப்படி முன்னேறும்?” என்று பிரதமர் கேள்வி எழுப்பினார். அதனால்தான், கடந்த 8 ஆண்டுகளாக நிலவி வரும் பற்றாக்குறை அழுத்ததை மாற்ற முயற்சித்து வருகிறோம் என்று கூறினார்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து குறிப்பிட்ட பிரதமர், பொது விநியோக திட்டத்தை தொழில்நுட்பத்துடன் இணைத்து, கோடிக்கணக்கான போலி பயனாளிகளை நீக்கி, நேரடி வங்கி பண பரிமாற்றத்தை கடைப்பிடிப்பதன் மூலம் தவறானவர்களுக்கு செல்வதில் இருந்து 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சேமிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். அதேபோல், வெளிப்படையான மின்னணு பரிவர்த்தனைகள், அரசு மின்னணு சந்தை மூலம் வெளிப்படையான அரசு கொள்முதல் ஆகியவை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.

வெளிநாட்டு பொருட்களை அதிகம் சார்ந்திருப்பது ஊழலுக்கு பெரிய காரணம் என்று பிரதமர் கூறினார். பாதுகாப்பு துறையில் தற்சார்பை நோக்கிய அரசின் முயற்சியை எடுத்துரைத்த அவர், துப்பாக்கிகள் முதல் போர் விமானங்கள் மற்றும் பயண விமானங்கள் வரை இந்தியா தமது சொந்த பாதுகாப்பு தளவாட உபகரணங்களைத் தயாரிக்கும் என்பதால், ஊழல் வாய்ப்புகள் முடிவுக்கு வருவதாக சுட்டிகாட்டினார்.

மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கான அனைவரின் முயற்சிகளையும் ஊக்குவிக்கும் ஒரு அமைப்பு என்று தெரிவித்தார். கடந்த முறை ‘தடுப்பு விழிப்புணர்வு’க்கான தனது கோரிக்கையை நினைவு கூர்ந்த பிரதமர், அதையயாட்டிய திசையில் சென்றதாக மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தை பாராட்டினார். தணிக்கை மற்றும் ஆய்வுகளை நவீனமயமாக்குவது குறித்து ஊழல் தடுப்பு கண்காணிப்பு அçமப்பினர் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஊழலுக்கு எதிரான அரசின் நடவடிக்கை அனைத்து துறைகளிலும் காண வேண்டியது அவசியம் என்று கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்காக, ஊழல் இல்லா நிர்வாகச் சூழலை நாம் உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

ஊழலைக் கண்காணிக்கும் பணியில் சாதாரண மக்களை கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். “ஊழல்வாதிகள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எந்த சூழ்நிலையிலும் காப்பாற்றப்படக்கூடாது, அது உங்களைப் போன்ற அமைப்புகளின் பொறுப்பு என்று கூறினார். ஊழல்வாதிகள் எவருக்கும் அரசியல்-சமூக ஆதரவு கிடைக்கக்கூடாது என்றும் ஒவ்வொரு ஊழல்வாதியையும் சமூகம் சிறையில் அடைக்க வேண்டும் என்றும், அதற்கான சூழலை உருவாக்குவதும் அவசியம் என்றும் தெரிவித்தார்.

மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் போன்ற ஊழலுக்கு எதிராக செயல்படும் நிறுவனங்கள் எந்த வகையிலும் தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் வலியுறுத்தினார். எந்தவொரு அரசியல் சார்பாகவும் பணி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிமையாக்குவதற்கு பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதற்கு எதிரானவர்கள் இந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளைத் தடுக்கவும், தனிநபர்களை அவதூறு செய்யவும் முயற்சிப்பார்கள் என்று பிரதமர் கூறினார்.

Spread the love