November 29, 2022

நெக்சா பிராண்டிங்கில் முதல் சிஎன்ஜி கார் அறிமுகம்

புது தில்லி, நவ.2

மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் எக்ஸ்எல்6-சிஎன்ஜி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

புதிய மாருதி சுசுகி எக்ஸ்எல்-சிஎன்ஜி மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 24 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

மேலும், இந்த கார் ஸீட்டா எம்டி எனும் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதே காருடன் பேலனோ சிஎன்ஜி மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய மாருதி சுசுகி மாடலில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 99 ஹெச்பி பவர், 136 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இந்த என்ஜின் 87 ஹெச்பி பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிசன் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சிஎன்ஜி மாடல் லிட்டருக்கு 26.32 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த காரில் 7 இன்ச் ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரூயிஸ் கண்ட்ரோல், எல்இடி டிஆர்எல்கள், நான்கு ஏர்பேக், இஎஸ்பி மற்றும் ஹில் ஹோல்டு அம்சம், எல்இடி பாக் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த கார் மாதாந்திர சந்தா முறையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

Spread the love