December 7, 2022

நெக்சஸ் டிரஸ்ட் பங்கு வெளியீட்டின் வாயிலாக
ரூ.4,100 கோடி நிதியை திரட்டுகிறது

புது தில்லி, நவ.19

நெக்சஸ் செலக்ட் டிரஸ்ட்’ நிறுவனம், சில்லரை ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை பிரிவில், முதல் நிறுவனமாக, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம், உலகளாவிய முதலீட்டு நிறுவனமான ‘பிளாக்ஸ்டோன்’ பின்னணியில் செயல்பட்டு வருகிறது. பங்கு வெளியீட்டின் வாயிலாக ரூ.4,100 கோடி நிதியை திரட்ட உள்ளது. மேலும், இந்நிறுவனத்தின் வசம், 14 முக்கிய நகரங்களில், 17 மால்கள் உள்ளன. இவற்றின் மொத்த பரப்பு ஒரு கோடி சதுர அடியாகும். இதன் மதிப்பு ரூ.24,600 கோடி ரூபாய்.

Spread the love