January 22, 2023

நிலக்கல் – பம்பை இடையிலான
அரசு பஸ் வருவாய் ரூ.4 கோடி கிடைத்துள்ளது

சபரிமலை, நவ.29

நிலக்கல் -பம்பை வழித்தடத்தில், கேரள அரசு பஸ் சேவை வாயிலாக, கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.4 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: பம்பை வரும் வாகனங்கள் அனைத்தும் நிலக்கல்லில் நிறுத்தப்படுகின்றன. இதில், 15 இருக்கை வரை உள்ள வாகனங்கள் பம்பை வந்து பக்தர்களை இறக்கி விட்டு, மீண்டும் நிலக்கல் திரும்பி விட வேண்டும்.

மேலும், தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள், கேரள அரசு பஸ்களில் நிலக்கல் வந்து ஊர் திரும்ப வேண்டும். இதற்காக, 40 ஏசி பஸ்கள் உட்பட 169 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் கண்டக்டர்கள் இல்லாமல் இயக்கப்படுகின்றன. இதற்காக நிலக்கல் பஸ் ஸ்டாண்டில் உள்ள கவுன்டர்களில், பம்பை செல்லவும், திரும்பி நிலக்கல் வரவும் ஒரே நேரத்தில் டிக்கெட் எடுக்கலாம். ஏசி பஸ்சில் ரூ.80ம், சாதாரண பஸ்சில் ரூ.50ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த பஸ் சேவை வாயிலாக, கடந்த 10 நாட்களில் மட்டும் 4.18 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. நவ., 21ல் அதிகபட்சமாக 52 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Spread the love