October 3, 2022

நிலக்கரி இறக்குமதி கணிசமாக குறைப்பு
மாநிலங்களவையில் அமைச்சர் ஜோ´ தகவல்

புது தில்லி, பிப்.8

வெப்ப நிலக்கரி தேவைக்கான இறக்குமதி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோ´ தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் மாநிலங்களவையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

2022-23ம் நிதியாண்டுக்கு நிலக்கரி அடிப்படையிலான மின்சார உற்பத்திக்கு 72.7 கோடி டன் உள்நாட்டு நிலக்கரி தேவைப்படும் என மின்துறை அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.

நிலக்கரி தேவைக்காக வெளிநாடுகளிலிருந்து அதனை இறக்குமதி செய்வது வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில், வரும் நிதியாண்டில் நிலக்கரி தேவையை ஈடு செய்ய கோல் இந்தியா மற்றும் சிங்கரணி கொலிரீஸ் நிறுவனங்களின் உற்பத்தியே போதுமானதாக இருக்கும். மேலும், கடந்த மாதத்தில் கோல் இந்தியா நிறுவனம் 5.07 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்து அளித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் ஜனவரியில் கோல் இந்தியா வழங்கிய 4.08 கோடி டன் நிலக்கரியுடன் ஒப்பிடுகையில் 24 சத அதிகம் என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love