October 4, 2022

நிதி இழப்பைத் தவிர்க்க தொழில்நுட்பக் கருவிகளின்
பயன்பாடு குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி: நிதியமைச்சர்

மும்பை, செப்.15

நிதி இழப்பைத் தவிர்க்க நவீன தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாடு குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் நடைபெற்ற வருவாய்த் துறை அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்று அவர் இது குறித்து பேசியதாவது: வருவாய்த் துறையில் தவறுதலாக ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்யும் வகையில், நவீன தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடு குறித்து அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கப்படும். இதற்காக தொழில்நுட்ப நிறுவனத்தினர் பணியமர்த்தப்படுவர் என்றார்.

இதுகுறித்து வருவாய்த் துறை செயலர் தருண் பஜாஜ், மத்திய மறைமுக வரிகள் வாரியம் (சிபிஐசி) விவேக் ஜோரி ஆகியோரிடம் ஏற்கெனவே ஆலோசனை மேற்கொண்டேன். அதிகாரிகள் அன்றாட பயிற்சியில் கிடைக்கும் யோசனைகளை தினந்தோறும் பணியில் நடைமுறைப்படுத்தினால் மன அழுத்தத்தைக் குறைக்கலாம் என்றார். முன்னதாக ஜிஎஸ்டி ஊழியர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளை மத்திய நிதியமைச்சர் திறந்துவைத்தார்.

Spread the love