September 27, 2022

நாள்தோறும் 28.4 கோடி டிஜிட்டல் பண பரிவர்த்தனை
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தகவல்

புது தில்லி, செப்.5

நாள்தோறும் 28.4 கோடி டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 2013-ம் ஆண்டுக்குப் பிறகு ரூ.24.8 லட்சம் கோடிக்கு மேல் நேரடி பயன் பரிமாற்றம் (டிபிடி) மூலம் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நாயளான்றுக்கு சராசரியாக 90 லட்சத்துக்கும் அதிகமாக நேரடி பயன் பரிமாற்றம் இருந்துள்ளது. பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் 10 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ஒரே நாளில் சுமார் ரூ.20,000 கோடி செலுத்தப்பட்டது.

கடந்த 2021-22-ம் ஆண்டில் மட்டும் 8,840 கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் ஜூலை 24-ம் தேதி வரை 3,300 கோடி பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதாவது சராசரியாக ஒரு நாளில் 28.4 கோடி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை வெற்றிகரமாக அமல்படுத்துவதில் ‘வளரும்’ நாடுகள் மட்டுமின்றி ‘வளர்ந்த’ நாடுகளும் இந்தியாவிடம் இருந்து கற்று கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love