November 29, 2022

நாமக்கல்லில் 31 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர்
விநியோகத்திற்காக மறுசீரமைப்பு பணிகள் தொடக்கம்

நாமக்கல், நவ.7

நாமக்கல் வட்டம், கே.புதுப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல், ஆட்டோ நகர் மற்றும் மோகனூர், நாமக்கல் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 31 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் விநியோக திட்ட மறுசீரமைப்பு பணிகளை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தொடங்கி வைத்தார்.

நாமக்கல், ஆட்டோ நகர் மற்றும் மோகனூர், நாமக்கல் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 31 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் காவிரி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 1998 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ் மோகனூர் வட்டம், குமாரபாளையம் காவிரி ஆற்று பகுதியில் 2 கிணறுகள் அமைக்கப்பட்டுஇ 12 மின் மோட்டர்களால் 8.44 கி.மீ தூரத்திற்கு கல்நார் குழாய் மூலமாக நீர் கொண்டு செல்லப்பட்டு, 4,200 வீடுகளை சேரந்த 27,445 நபர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் நாயளான்றுக்கு, நபர் ஒன்றுக்கு 40 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

தற்போது ஜல் ஜீவன் மிசன் திட்டத்தின் வழிகாட்டுதலின்படி, நாமக்கல், ஆட்டோ நகர் மற்றும் மோகனூர், நாமக்கல் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 31 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நாயளான்றுக்குஇ நபர் ஒன்றுக்கான குடிநீர் 55 லிட்டராக அதிகப்படுத்தி வழங்கப்படவுள்ளது. இதற்காக மோகனூர் வட்டம், குமாரபாளையத்தில் கூடுதலாக 1 நீர் உறிஞ்சி கிணறு அமைக்கவும்இ 12 மின் மோட்டர்கள் புதியதாக நிறுவவும்இ தற்போது உள்ள கல்நார் குழாய்களுக்கு பதிலாக 8.44 கிமீட்டர் நீளத்திற்கு புதியதாக இரும்பு குழாய் பதிக்கவும் ரூ.4.19 கோடியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நாமக்கல் பராமரிப்பு கோட்டம் மூலமாக மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகள் 05.07.2023-க்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

Spread the love