October 3, 2022

நாமக்கல்லில் வாக்குப்பதிவு இயந்திரங்களை
2ம் கட்ட கணிணி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

நாமக்கல், பிப்.8

நாமக்கல் மாவட்டத்தில் 19.02.2022 அன்று 05 நகராட்சிகளுக்குட்பட்ட 153 வார்டுகள் மற்றும் 19 பேரூராட்சிகளுக்குட்பட்ட 294 வார்டுகள் என மொத்தம் 447 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு சாதாரண நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களை முதற்கட்டமாக கணிணி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நேற்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் போட்டியின்றி 10 நபர்கள் தேர்வு செய்யப்பட‌ உள்ளனர். வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள் இறுதி செய்யப்பட்ட நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இரண்டாம் கட்ட கணிணி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் பார்வையாளரும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா, முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங் தலைமையில் நடைபெற்றது.

இதன்படி, குமாரபாளையம் நகராட்சியில் 73 வாக்குச்சாவடிகளில் 73 கட்டுப்பாட்டுக்கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கூடுதலாக 15 கட்டுப்பாட்டுக்கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சியில் 109 வாக்குச்சாவடிகளில் 105 கட்டுப்பாட்டுக்கருவி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கூடுதலாக 21 கட்டுப்பாட்டுக்கருவி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இராசிபுரம் நகராட்சியில் 51 வாக்குச்சாவடிகளில் 51 கட்டுப்பாட்டுக்கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கூடுதலாக 11 கட்டுப்பாட்டுக்கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு நகராட்சியில் 88 வாக்குச்சாவடிகளில் 88 கட்டுப்பாட்டுக்கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கூடுதலாக 18 கட்டுப்பாட்டுக்கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகளில் மொத்தம் உள்ள 365 வாக்குச்சாவடிகளில் 361 கட்டுப்பாட்டுக்கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கூடுதலாக 74 கட்டுப்பாட்டுக்கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

Spread the love