October 4, 2022

நாட்டில் 45 தகவல் சேமிப்பு மையங்கள் கூடுதலாக அமைக்க திட்டம்: ஆய்வறிக்கை

புது தில்லி, செப்.1

நாட்டின் தகவல் சேமிப்பகத் துறையின் மதிப்பு 560 கோடி டாலராக (சுமார் ரூ.44,499 கோடி) உள்ளதாக அனாரோக் அண்டு பின்ஸ்வாங்கர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியா முழுவதும் தற்போது சுமார் 1.1 கோடி சதுர அடி பரப்பளவில் 138 தகவல் சேமிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் தகவல் சேகரிப்புத் திறன் 737 மெகாவாட்டாக உள்ளது. தற்போதைய தகவல் சேமிப்புத் திறனில் 57 சதம் மும்பை மற்றும் சென்னையில் உள்ளது. இந்த மையங்கள் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த தகவல் சேமிப்பகத் துறையின் மதிப்பு 560 கோடி டாலராக உள்ளது.

வரும் 2025ம் ஆண்டில் நாட்டின் தகவல் சேமிப்பு மையங்கள் சுமார் 1.3 கோடி சதுர அடி பரப்பளவில் 1,015 மெகாவாட் தகவல் சேமிப்புத் திறன் கொண்டவையாக இருக்கும். கூடுதலாக 45 தகவல் சேமிப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love