February 3, 2023

நாட்டில் 18 லட்சத்துக்கு மேல்
மின்சார வாகனங்கள் பதிவு: கட்கரி தகவல்

புது தில்லி, டிச.8

நாட்டில் இதுவரை 18 லட்சத்துக்கு மேல் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் தெரிவித்துள்ளதாவது:

அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 4,14,978 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்து தில்லியில் 1,83,74 வாகனங்களும், மகாராஷ்டிரத்தில் 1,79,087 வாகனங்களும் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 660 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான பொது மின்னேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்து, தில்லியிலும் (539) தமிழ்நாட்டிலும் (439) அதிக மின்னேற்று நிலையங்கள் உள்ளன. இந்தியா முழுவதும் 5,151 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான பொது மின்னேற்று நிலையங்கள் உள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் 719 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கரோனா பரவல், பருவமழை போன்ற காரணங்களால் சில மாநிலங்களில் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Spread the love