December 9, 2022

நாட்டில் ரூ.25 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை

A saleswoman stands behind the showcased gold necklaces at a jewellery showroom in Agartala, August 18, 2010. REUTERS/Jayanta Dey/Files

புது தில்லி, அக்.26

தீபாவளி பண்டிகையின் போது இந்தியாவில் தங்கம் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக இரண்டே நாட்களில் ரூ.25,000 கோடிக்கு தங்கம் விற்பனையாகி உள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து விரிவான செய்தியாவது: இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களில் மொத்த வர்த்தகம் ரூ.45,000 கோடி என்றும் அதில் தங்கம் மட்டுமே ரூ.25,000 கோடி என்றும் மற்ற பொருட்களின் விற்பனை ரூ.20,000 கோடி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் ரூ.25 ஆயிரம் கோடிக்கு அக்டோபர் 22, 23 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விற்பனையாகி உள்ளது என்றும் மீதமுள்ள ரூ.20 ஆயிரம் கோடிக்கு ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் மற்றும் கம்ப்யூட்டர் சார்ந்த பொருட்கள், வீடு அலுவலகத்திற்கு தேவையான அலங்காரப் பொருட்கள், இனிப்பு தின்பண்டங்கள், சமையல் பொருட்கள் உள்பட பல எலக்ட்ரானிக் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனையாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்திருப்பதாவது: இரண்டு நாள் தீபாவளி கொண்டாட்டத்தின் போது நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மிக அதிகமாக விற்பனையானது. குறிப்பாக தங்க நாணயங்கள் அதிகமாக விற்பனையானது என்று தெரிவித்துள்ளது. மேலும் கடந்த இரண்டு நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி மட்டுமே 25 ஆயிரம் கோடி விற்பனையானது ஒரு மிகப்பெரிய சாதனை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் முழு அளவில் சிறப்பாக கொண்டாடப்படும் தீபாவளி என்பதால் இந்த ஆண்டு தீபாவளி எழுச்சிமிக்க தீபாவளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தங்கத்தின் தேவை சுமார் 80 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாகவும், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் தங்கத்தின் வர்த்தகம் முழுமையாக மீண்டு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love