September 27, 2022

நாட்டில் யூரியா அல்லா பொருள்களின் விலை உயர்த்தப்படாது: அமைச்சர்

புது தில்லி, செப்.14

நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லை என்றும், யூரியா அல்லாத பொருள்களின் விலை உயர்த்தப்படாது என்றும் மத்திய ரசாயன, உரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: உத்தர பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சர்வதேச பால் கூட்டமைப்பு மாநாட்டின்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளதாவது:

நாட்டில் தற்போது உரத் தட்டுப்பாடு இல்லை. ரபி பருவத்தையயாட்டி பாஸ்பேட், பொட்டாசியத்துக்கான ஊட்டச்சத்து சார்ந்த கொள்கை (என்பிஎஸ்) சர்வதேச விலையை ஆய்வு செய்த பின்னர் வெளியிடப்படும் என்றார்.

மேலும், டை-அம்மோனியம் பாஸ்பேட், யூரியா அல்லாத உரங்களின் சில்லறை விலை உயர்வை அனுமதிக்க மாட்டோம். நானோ திரவ யூரியாவை விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். பாரம்பரிய உரத்தைக் காட்டிலும் இவை மண்ணுக்கு வளம் சேர்க்கக் கூடியவை என்றார். தற்போது நாட்டில் பாரம்பரிய யூரியா உற்பத்தி 2.60 கோடி டன்னாக உள்ளது. சுமார் 90 லட்சம் டன் இறக்குமதி செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.

Spread the love