September 27, 2022

நாட்டில் கூடுதலாக 27 உள்நாட்டு விமான சரக்கு போக்குவரத்து முனையங்கள்: மத்திய அரசு

புது தில்லி, பிப்.8

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

கடந்த 2014ம் ஆண்டு வரை இந்தியாவில் 11 உள்நாட்டு விமான சரக்கு முனையங்கள், 19 சர்வதேச விமான சரக்கு முனையங்கள் இருந்தன. இந்திய விமான நிலையங்கள் ஆணையம் / சரக்கு போக்குவரத்து மற்றும் சரக்கு முனையம் சார்ந்த சேவைகள் நிறுவனம் மேலும் 27 உள்நாட்டு விமான சரக்கு முனையங்களை ஏற்படுத்தியுள்ளன.

மேலும், பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடனும், மாநில அரசு விமான நிலையங்களும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சரக்கு முனையங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதனால், சரக்குகளை கையாளும் திறன் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.

Spread the love