November 29, 2022

நாட்டின் 5வது பெரிய ஐடி நிறுவனமாக
எல்&டிஐ மைண்ட்ரீ உருவெடுத்தது

மும்பை, நவ.15

இந்திய ஐடி சந்தையில் டிசிஎஸ், இன்போசிஸ், யஹச்சிஎல், விப்ரோ, டெக் மஹிந்திரா ஆகியவை டாப் 5 இடங்களில் இருக்கும் வேளையில் நடுத்தரப் பிரிவுகளில் இருந்து இரண்டு முன்னணி ஐடி சேவை நிறுவனமான எல்&டி இன்போடெக் மற்றும் மைண்ட்ரீ ஆகியவை அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இதன் மூலம் இக்கூட்டணி நிறுவனமான எல்டிஐமைண்ட்ரீ நாட்டின் 5வது பெரிய ஐடி சேவை நிறுவனமான உருவெடுத்துள்ளது.

எல்&டி இன்போடெக் மற்றும் மைண்ட்ரீ ஆகியவை இணைக்கப்படச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் பங்குதாரர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இந்த இணைப்பைத் தொடர்ந்து மைண்ட்ரீ பங்குதாரர்களுக்கு எல்&டி இன்போடெக் பங்குகள் கொடுக்கப்பட்டது.

அதாவது 100 மைண்ட்ரீ பங்குகளுக்கு 73 எல்&டி ஐ கொடுக்கப்பட்டது. இதன் மைண்ட்ரீ அனைத்தையும் எல்&டி இன்போ வாங்கிய நிலையில் இணைக்கப்பட்ட நிறுவனத்தில் அதன் தாய் நிறுவனமான எல்&டி சுமார் 68.73 சதவீத பங்குகளைக் கொண்டு உள்ளது. இவ்விரு நிறுவனங்கள் இணைப்பின் மூலம் இரு நிறுவனங்கள் தனித்தனி வி­யத்தில் சிறப்பு வாய்ந்தாக இருக்கும் நிலையில் தற்போது இணைந்து பல துறையில் பல பிரிவுகளில் சிறப்பான சேவை அளிக்க முடியும்.

இதேபோல் பிற முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் போல் பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களை எளிதாகப் பெற்று வேகமாகவும், திறம்பட முடிக்கப் போதிய தளமும், ஊழியர்களும் வாய்ப்புகளும் எல்&டி இன்போக்கு உருவாகியுள்ளது. இதேபோல் இவ்விரு நிறுவனங்களும் தங்களது வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியும். இந்த அதிரடி வாய்ப்பில் 4வது இடத்தில் தடுமாறிக் கொண்டு இருக்கும் விப்ரோ-வை முந்தி எல்&டி இன்போமைண்ட்ரீ 4வது இடத்திற்கு முன்னேறவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

Spread the love