February 3, 2023

நாட்டின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவில் பயன்பாட்டுக்கு வந்தது

ஸ்ரீஹரிகோட்டா, நவ.29

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தனியார் புத்தாக்க நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய ஏவுதளம் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரோ தலைவர் சோம்நாத் அந்த ஏவுதளத்தை கடந்த 25ம் தேதி தொடக்கி வைத்தார். அடுத்த மாதத்தில் அங்கிருந்து முதல் ராக்கெட் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை ஐஐடியுடன் ஒருங்கிணைந்து செயல்படும் அக்னிகுல் காஸ்மோஸ் எனும் நிறுவனம் இந்த ஏவுதளத்தை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை ஏவக் கூடிய மிகப் பெரிய ஏவுதளமோ அல்லது இஸ்ரோவால் அமைக்கப்பட்ட மற்ற ஏவுதளமோ எங்களது தேவைக்கு ஏற்புடையதாக இல்லாததால் நாங்களே பிரத்யேகமாக ஒரு ஏவுதளத்தை வடிவமைக்கத் திட்டமிட்டோம் என்றனர்.

சதீஷ் தவண் ஏவுதள வளாகத்தில் கடந்த ஆறு மாதங்களாக அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது அது நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அக்னிபான்’ எனப்படும் எங்களது ராக்கெட் காப்புரிமை பெற்ற பகுதி கிரயோஜெனிக் என்ஜினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. அதனை ஏவுவதற்கு பிரத்யேகமாக இருக்கக் கூடிய ஏவுதளம் தேவை. அதனைப் பூர்த்தி செய்யவே இந்த ஏவுதளத்தை கட்டமைத்துள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர். ராக்கெட், செயற்கைக்கோள் மட்டுமல்லாது விண்வெளி ஆய்வுத் திட்டங்களுக்கான கட்டமைப்பு வசதிகளையும் தனியார் நிறுவனங்கள் மேற்கொள்வதற்கான சிறப்புத் திட்டமான இன்ஸ்பேஸ் கடந்த 2020ல் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Spread the love