January 22, 2023

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதமாக சரிவு: மத்திய புள்ளியல் அலுவலக தரவு அறிக்கை

புது தில்லி, டிச.1

நடப்பு நிதியாண்டில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, வேகம் குறைந்து, 6.3 சதமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த நிதியாண்டில், இதே இரண்டாவது காலாண்டில், வளர்ச்சி 8.4 சதமாக இருந்தது.

மேலும், நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், வளர்ச்சி 13.5 சதமாக இருந்த நிலையில், தற்போது அவை பாதியாக குறைந்துள்ளது. பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள், செப்டம்பர் காலாண்டில் வளர்ச்சி 5.8 சதத்திலிருந்து 7 சதத்துக்குள் இருக்கும் என தெரிவித்திருந்தனர்.

எஸ்பிஐ வளர்ச்சி 5.8 சதமாக இருக்கும் என குறைவாக கணித்திருந்தது. ஆனால், ஆர்பிஐ, மதிப்பீட்டு காலத்தில், வளர்ச்சி 6.1 ல் 6.3 சதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில்,செப்டம்பர் காலாண்டு வளர்ச்சி 6.3 சதமாக உள்ளதாக, மத்திய புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது.

Spread the love