September 27, 2022

நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி
வலுவான வளர்ச்சி எட்டியது

Workers assemble mobile phones at a Dixon Technologies factory in Noida, Uttar Pradesh, India, on Thursday, Jan. 28, 2021. Dixon boasts a market value of more than $2.5 billion and the capacity to produce about 50 million smartphones this year. Photographer: Anindito Mukherjee/Bloomberg via Getty Images

புது தில்லி, செப்.2

நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஒன்பது மாதங்களில், இரண்டாவது முறையாக, ஆகஸ்ட் மாதத்தில் வலுவான வளர்ச்சியை எட்டியுள்ளதாக எஸ் அண்ட் பி குளோபல் நிறுவனம் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: ஆகஸ்ட் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, பிஎம்ஐ குறியீடு, 56.2 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, ஜூன் மாதத்தில் 56.4 புள்ளிகளாக இருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், தேவை அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் குறித்த கவலைகள் குறைந்தது ஆகியவை காரணமாக, தயாரிப்புத் துறை உற்பத்தியில் வலுவான வளர்ச்சி ஏற்பட்டு உள்ளது. உற்பத்தி அளவுகள் உயர்ந்ததை அடுத்து, ஏற்றுமதியும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நிறுவனங்களைப் பொறுத்தவரை, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வணிக நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச் சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். ஆகஸ்ட் மாதத்தில், இக்குறியீடு, 56.2 புள்ளிகளுக்கு உயர்ந்ததன் வாயிலாக, வலுவான முன்னேற்றத்தை உணர்த்தியுள்ளது. கடந்த 14 மாதங்களாக தொடர்ந்து, பிஎம்ஐ குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஆகஸ்ட் மாதத்தைப் பொறுத்தவரை, கொரோனா தடைகள் அதிகம் இல்லாத காரணத்தினாலும், புதிய ஆர்டர்கள் கிடைத்ததன் காரணமாகவும், இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. மேலும், பணவீக்கம் குறித்த கவலைகள் குறைந்துள்ளதை அடுத்து, வணிக நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love