September 27, 2022

நாட்டின் டிஜிட்டல் புரட்சி அமெரிக்காவுக்கு
வாய்ப்புகளை வழங்குகிறது: நிதியமைச்சர் தகவல்

புது தில்லி, செப்.8

இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி அமெரிக்க நிறுவனங்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் வாய்ப்புகளை வழங்குகிறது என புது டில்லியில் நடைபெற்ற வணிக மாநாடு ஒன்றில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் மாதம் அமெரிக்கா சென்றிருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கு இந்திய டிஜிட்டல் புரட்சியில் முதலீடுகள் என்ற தலைப்பில் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றிருந்தார். அப்போது இந்தியாவில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக பிரச்னைகள் மீது கவனம் செலுத்தி அவை களையப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தில்லியில் நடைபெற்ற வணிக மாநாட்டில் டிஜிட்டல் புரட்சி ஏற்படுத்தியுள்ள வாய்ப்புகள் குறித்து தெரிவிக்கையில், டிஜிட்டல் வர்த்தகத்திற்கான இந்தியாவின் திறந்த அமைப்பு சில்லறை வர்த்தகம் மற்றும் உற்பத்தித் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்புகளை வழங்கும். இந்தியா அமெரிக்கா இடையே டிஜிட்டல் துறையில் சேர்ந்து பணியாற்ற ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. நாட்டின் டிஜிட்டல் புரட்சியானது, அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது. அதிக முதலீடுகளை கவர விதிகளை எளிதாக்கும் பணியில் மத்திய அரசு வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் ஈடுபட்டுள்ளது என்றார். விலைவாசி குறித்து பேசியவர், உயர் பணவீக்க சவாலை நாடு உறுதியுடன் கையாண்டு வருகிறது. அரசாங்க சீர்திருத்தங்களால் இந்தியாவின் பொருளாதார மறுமலர்ச்சி உந்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love