December 8, 2022

நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி தடை நீட்டிப்பு

புது தில்லி, அக்.31

நாட்டின் சர்க்கரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாட்டை, அடுத்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இது குறித்து விரிவான செய்தியாவது: ஏற்றுமதி சம்பந்தமாக மத்திய அரசு முன்பு விதித்த கட்டுப்பாடுகள், நடப்பு ஆண்டு அக்டோபர் 31ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், இந்த கால நீட்டிப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

உள்நாட்டு சந்தையில், சர்க்கரை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் பொருட்டு, அரசு இத்தகைய தடையை விதித்து உள்ளது. மேலும், நடப்பாண்டில், இந்தியா உலகளவில் மிகப் பெரிய சர்க்கரை உற்பத்தியாளராகவும்; இரண்டாவது மிகப் பெரிய ஏற்றுமதியாளராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love