December 9, 2022

நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு
43.55 லட்சம் கோடியாக உயர்வு

மும்பை, நவ.7

நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, நடப்பு ஆண்டில், வேறு எந்த வாரத்திலும் இல்லாத வகையில், கடந்த அக்டோபர் 28ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஆர்பிஐ வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலாவது: மதிப்பீட்டு வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 53,800 கோடி ரூபாய் அதிகரித்து, 43.55 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே, இருப்பு தொடர்ந்து சரிவைக் கண்டு வந்துள்ள நிலையில், தற்போது இத்தகைய உயர்வை கண்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பின் இந்த உயர்வு காணப்பட்டு உள்ளது. மேலும், கடந்த ஆண்டு அக்டோபரில், இதுவரை இல்லாத அளவுக்கு அன்னிய செலாவணி இருப்பு, 52.89 லட்சம் ரூபாயாக உயர்ந்திருந்தது.

ஆனால், அதன் பின் உலக பொருளாதார சூழல் காரணமாக, டாலர் வலுப்பெற்றதை அடுத்து, அதை ஈடு செய்யும் விதமாக ரிசர்வ் வங்கி, அமெரிக்க டாலரை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு குறைந்தது. மதிப்பீட்டு வாரத்தில், தங்கத்தின் இருப்பும் அதிகரித்துள்ளது. தங்கத்தின் இருப்பு மதிப்பு ரூ.4,559 கோடி அதிகரித்து, ரூ.3.10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

Spread the love