December 8, 2022

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு
54,472 கோடி டாலராக அதிகரிப்பு

மும்பை, நவ.21

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவ. 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 52,999.4 கோடி டாலராக சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஆர்பிஐ வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த நவ. 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 108.7 கோடி டாலர் அதிகரித்து 52,999.4 கோடி டாலராக இருந்தது. இது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.44,40,566 கோடியாகும். முந்தைய வாரங்களில், அந்நியச் செலாவணி சொத்து மதிப்பும் (எஃப்சிஏ) தங்கத்தின் கையிருப்பும் கணிசமான அளவில் குறைந்ததன் காரணமாக, அந்நிய செலாவணி கையிருப்பு சரிவைச் சந்தித்தது.நவ. 11ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் எஃப்சிஏ 118 கோடி டாலர் அதிகரித்து 48,253 கோடி டாலராக இருந்தது.

அதேபோல், தங்கத்தின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 264 கோடி டாலர் அதிகரித்து 3,970 கோடி டாலராகக் காணப்பட்டது.அக்டோபர் 21ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், தங்கத்தின் கையிருப்பு 11,793 கோடி டாலர் வீழ்ச்சியடைந்து 52,452 கோடி டாலராக இருந்த நிலையில் மதிப்பீட்டு வாரத்தில் அது அதிகரித்துள்ளது என ஆர்பிஐ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Spread the love