December 9, 2022

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 52,999 கோடி டாலராக அதிகரிப்பு: ஆர்பிஐ தகவல்

மும்பை, நவ.14

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவ. 4ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 52,999.4 கோடி டாலராக சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆர்பிஐ வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த நவ. 4ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 108.7 கோடி டாலர் அதிகரித்து 52,999.4 கோடி டாலராக இருந்தது. இது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.42,69,003.62 கோடியாகும். இதற்கு முன்னர், கடந்த நவ. 4ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 656.1 கோடி டாலர் அதிகரித்து 53,108.1 கோடி டாலராக இருந்தது. இது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.43,53,935 கோடியாகும்.

மேலும், மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி சொத்து மதிப்பும் (எஃப்சிஏ) தங்கத்தின் கையிருப்பும் கணிசமான அளவில் குறைந்ததன் காரணமாக, அந்நிய செலாவணி கையிருப்பு சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த நவ. 4ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் எஃப்சிஏ 12 கோடி டாலர் சரிந்து 47,072.7 கோடி டாலராக இருந்தது. அதேபோல், தங்கத்தின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 70.5 கோடி டாலா குறைந்து 3,705.7 கோடி டாலராகக் காணப்பட்டது.

மதிப்பீட்டு வாரத்தில், பன்னாட்டு நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமமான எஸ்டிஆர் 23.5 கோடி டாலர் குறைந்து 1,739 கோடி டாலராகவும், பன்னாட்டு நிதியத்தில் நாட்டின் இருப்பு நிலை 2.7 கோடி டாலர் குறைந்து 482 கோடி டாலராகவும் இருந்தது என ஆர்பிஐ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Spread the love