November 29, 2022

நாடு முழுவதும் 32 லட்சம் திருமணங்களால்
ரூ.3.75 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும்

புது தில்லி, நவ.8

நாடு முழுதும், நவ.,4 – டிச.14ம் தேதி வரை 32 லட்சம் திருமணங்கள் நடக்க உள்ளதாகவும், இதன் வாயிலாக, ரூ.3.75 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடக்கும் என்றும், அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளதாவது:

நாடு முழுதும், 35 நகரங்களில் உள்ள 4,302 வர்த்தகர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், நவ.,4 – டிச.,14ம் தேதி வரை 32 லட்சம் திருமணங்கள் நடக்க உள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

மேலும், இதன் மூலம், ரூ.3.75 லட்சம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடக்கும் என மதிப்பிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த ஆண்டு இதே சீசனில் 25 லட்சம் திருமணங்கள் நடந்தன. இதில் மூன்று லட்சம் கோடி வர்த்தகம் நடந்தது. திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் இந்த வருமானம் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Spread the love