December 9, 2022

நவ.9ல் பைவ் ஸ்டார் பைனான்ஸ்’ பங்கு வெளியீடு
பங்கு விலை ரூ.450-474 ஆக நிர்ணயம்

புது தில்லி, நவ.5

வங்கி சாரா நிதி நிறுவனமான, பைவ் ஸ்டார் பிசினஸ் பைனான்ஸ் பங்கு வெளியீடு, இம்மாதம் 9ம் தேதி துவங்கி, 11ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை முன்னிட்டு,அதன் பங்கு விலையை நிர்ணயித்து அறிவித்துள்ளது. இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 1,960 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ள நிலையில், இதன் பங்கின் விலை 450 – 474 ரூபாய் என நிர்ணயித்துள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், துணிகர முதலீட்டாளர்கள் நாளை மறுதினம் முதல் முதலீட்டை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனம், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.இந்த பங்கு வெளியீட்டின்போது, புதிய பங்குகள் எதுவும் வெளியிடப்படவில்லை. முழுக்க முழுக்க, நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களின் பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

Spread the love