February 3, 2023

நவ.30ல் பங்கு வெளியிடும் யுனிபார்ட்ஸ் இந்தியா
பங்கு விலை ரூ.548-577 ஆக நிர்ணயமம்

புது தில்லி, நவ.26

யுனிபார்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 30ம் தேதி துவங்க இருப்பதைஅடுத்து, அதன் பங்கு விலை 548 – 577 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: பொறியியல் பிரிவில் இயங்கி வரும் யுனிபார்ட்ஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, இம்மாதம் 30ம் தேதியன்று துவங்கி, டிசம்பர் 2ல் முடிவடைய உள்ளது. பங்கு வெளியீட்டின் வாயிலாக, இந்நிறுவனம் 836 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துணிகர முதலீட்டாளர்களுக்கான பங்கு வெளியீடு, 29ம் தேதி துவங்குகிறது. இந்த பங்கு வெளியீட்டின் போது, முழுக்க முழுக்க, நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. மொத்தம் 1.45 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. பாதி பங்குகள், தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளன. 35 சதவீத பங்குகள் சில்லரை முதலீட்டாளர்களுக்கும்; மீதி 15 சதவீத பங்குகள் நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள், குறைந்தபட்சம் 25 பங்குகள் அல்லது அதன் மடங்குகளில் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பங்கு வெளியீட்டுக்குப் பின், இந்நிறுவன பங்குகள், டிசம்பர் 12ம் தேதியன்று பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.

Spread the love