November 29, 2022

நவ.27ல் ஷில்லாங், சிரபுஞ்சிக்கு விமான சுற்றுலா ஐஆர்சிடிசி தகவல்

சென்னை, அக்.29

ஷில்லாங், சிரபுஞ்சிக்கு நவ.27ல் விமான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

சென்னையில் இருந்து அசாம், மேகாலயா மாநிலங்களின் சுற்றுலா இடங்களை காணும் வகையில், ஐஆர்சிடிசி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

சென்னையில் இருந்து நவ.27ல் புறப்படும் விமான சுற்றுலாவில், ´ஷில்லாங், சிரபுஞ்சி, காமாக்யா, குவஹாத்தி மற்றும் காஜிரங்கா தேசிய பூங்கா ஆகிய இடங்களை சுற்றி பார்க்கலாம்.

ஏழு நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு 42 ஆயிரம் ரூபாய் கட்டணம். மேலும் விபரங்களுக்கு, 90031 40682, 82879 31977 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Spread the love