November 29, 2022

நவ.23 முதல் பெங்களூரு-புனே இடையே விமானச் சேவை தொடக்கம்: ஆகாசா ஏர்

புனே, நவ.3

நவம்பர் 23 முதல் பெங்களூருவில் இருந்து புனேவிற்கு முதல் விமானச் சேவையை ஆகாசா ஏர் விமான நிறுவனம் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது: புதிய விமான ஏர்லைன் நெட்வொர்க்கில் ஒன்பதாவது வழித்தடமாக இது அமைய உள்ளது. முதன் முதலாக ஆகஸ்ட் 7ம் தேதி செயல்படத் தொடங்கிய விமானச் சேவை, நவம்பர் இறுதிக்குள் சுமார் 58 தினசரி விமானங்களையும், 400 வாராந்திர விமானங்களையும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அதிகரித்துவரும் தேவை காரணமாக, நவம்பர் 23ம் தேதி பெங்களூரு மற்றும் புணே இடையேயான முதல் சேவையையும் நவம்பர் 26ம் தேதி இரண்டாவது சேவையையும் தொடங்க உள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மும்பை, அகமதாபாத், தில்லி, சென்னை, கொச்சி, குவஹாத்தி மற்றும் புணே ஆகிய ஏழு நகரங்களை இணைக்கும் வகையில் பெங்களூருவிலிருந்து தினசரி 20 விமானங்களை ஆகாசா ஏர் நிறுவனம் தற்போது வழங்கிவருகிறது.

புனே மற்றும் பெங்களூரு ஆகிய இரு இடங்களிலும் தகவல் தொழில்நுட்ப மையங்கள் அதிகம் செயல்பட்டு வருவதால், மலிவு கட்டணத்துடன் இந்த விமான இணைப்பு வழங்கப்படுவதாக ஆகாசா ஏர் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை வணிக அதிகாரி பிரவீன் ஐயர் தெரிவித்துள்ளார்.

Spread the love