December 8, 2022

நவ.22 முதல் என்டிடிவியின் கூடுதல் பங்குகளை அதானி குழுமம் வாங்குகிறது

புது தில்லி, நவ.14

என்டிடிவி நிறுவனத்தின் 26 சத பங்குகளை, இம்மாதம் 22ம் தேதி துவங்கி, டிசம்பர் 5ம் தேதி வரை சந்தையில் வாங்க இருப்பதாக, அதானி குழுமம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: அதானி குழுமம், ஏற்கனவே என்டிடிவியின் 29.18 சத பங்குகளை, மறைமுக வழியில் வாங்கிய நிலையில், தற்போது, சந்தையின் வாயிலாக கூடுதலாக 26 சத பங்குகளை வாங்கவுள்ளது.இந்நிலையில், இம்மாதம் 22 முதல், டிசம்பர் 5ம் தேதி வரையிலான காலத்தில், சந்தையில் 26 சத பங்குகளை வாங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தை வாயிலாக வாங்கும் இந்த ‘ஓப்பன் ஆபர் நடவடிக்கையில், ரூ.4 முகமதிப்புடன் கூடிய 1.67 கோடி என்டிடிவி பங்குகளை, அதானி குழுமம் வாங்கவுள்ளது.

மேலும், இந்த பரிவர்த்தனையில், ஒரு பங்கின் விலை ரூ.294 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, சந்தையில் பங்குகளை வாங்கும் பணியை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள ஜெஎம் பைனான்ஷியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன், அக்.17 முதல், நவம்பர் 1 வரையிலான காலகட்டத்தில், இந்த பங்குகளை சந்தையில் வாங்க இருப்பதாக, அதானி குழுமம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், சில நடைமுறை சிக்கல்களால், பங்குகளை வாங்கும் முயற்சி தள்ளிப்போனது. தற்போது மீண்டும் அதானி குழுமம் களமிறங்கியுள்ளது,

Spread the love