November 29, 2022

நவ.22ல் வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

நாமக்கல், நவ.17

நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் வாயிலாக, படித்து வேலைவாய்ப்பற்ற ஆண்இ பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்;கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு நாமக்கல் வட்டாரத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் 22.11.2022 அன்று நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 வரை நடைபெற உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில், நாமக்கல் வட்டாரத்தைச் சேர்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இருபாலரும்; கலந்து கொண்டு பொருத்தமான நிறுவனங்களை தேர்வு செய்து வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வேலை வாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய விரும்புகிற நிறுவனங்கள் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம்,கூடுதல் கட்டிடம், நாமக்கல் மாவட்டம் அலுவலக தொலைபேசி எண்.04286 – 281131க்கு தொடர்பு கொண்டு தங்களது நிறுவனத்தின் பெயரை 18.11.2022 அன்று மாலை 05.00 மணிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. எனவே, நாமக்கல் வட்டாரத்தைச் சேர்ந்த வேலையில்லா (ஆண்-பெண் இருபாலரும்) இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது என ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

Spread the love