November 29, 2022

நவ.17 முதல் சென்னை – பம்பை இடையே பேருந்துகள்
போக்குவரத்துறை துறை தகவல்

சென்னை, நவ.14

சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவ.17-ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை காண தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் செல்வது வழக்கம். இவர்களின் நலன் கருதி சென்னையில் இருந்து பம்பைக்கு நவ.17-ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணிக்கும், 4 மணிக்கும் என 2 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் பெரியவர்களுக்கு ரூ.1,090, சிறியவர்களுக்கு ரூ.545 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

மேலும், இந்த அதிநவீன மிதவை சொகுசு பேருந்து சேவையை வரும் ஜன.18-ம் தேதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளின் இருக்கைகளை, ழழழ.மிஐவிமிஉ.ஷ்ஐ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதேபோல, சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்தையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் பெரியவர்களுக்கு ரூ.575, சிறியவர்களுக்கு ரூ.288 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Spread the love