October 4, 2022

நவி டெக்னாலஜிஸ் பங்கு வெளியீடு மூலம் ரூ.3350 கோடி நிதி திரட்ட திட்டம்

புது தில்லி, செப்.14

தொழில்நுட்ப அடிப்படையிலான, நிதி மற்றும் சேவைகளை வழங்கி வரும் நிறுவனமான நவி டெக்னாலஜிஸ் நிறுவனம், ஐபிஓ எனும், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அனுமதி வழங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: மேலும், பங்கு வெளியீட்டின் வாயிலாக, ரூ.3,350 கோடி நிதியை திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. திரட்டப்படும் நிதியை, அதன் துணை நிறுவனங்களான நவி பின்சர்வ், நவி ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான சச்சின் பன்சால், பிளிப்கார்ட்டில் இருந்து வெளியே வந்தபிறகு, அங்கிட் அகர்வாலுடன் இணைந்து, 2018ல், நவி டெக்னாலஜிஸ் நிறுவனத்தை துவக்கினார். மேலும், இந்நிறுவனம், நவி எனும் பிராண்டு பெயரில் தனிநபர் கடன், வீட்டுக் கடன், பொது காப்பீடு, மியூச்சுவல் பண்டு ஆகிய துறைகளில் சேவைகளை வழங்கி வருகிறது.

Spread the love