February 3, 2023

நவம்பரில் மியூச்சுவல் பண்டு திட்டங்களில் எஸ்ஐபி மூலம் முதலீடு அதிகரிப்பு

புது தில்லி, டிச.10

மியூச்சுவல் பண்டு திட்டங்களில், எஸ்ஐபி எனும், சீரான முதலீட்டு முறையின் வாயிலாக, கடந்த நவம்பர் மாதத்தில், மிக அதிக அளவிலான முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: கடந்த நவம்பர் மாதத்தில், இதுவரை இல்லாத வகையில், ரூ.13,306 கோடி எஸ்ஐபி திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று சாதனையாகும்.

மேலும், முதலீட்டாளர்களின் முதிர்ச்சியையும் நம்பிக்கையும் வெளிப்படுத்துவதாக இது அமைந்துள்ளது என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எஸ்ஐபி வாயிலாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு, கடந்த மே மாதத்திலிருந்து, ரூ.12 ஆயிரம் கோடிக்கும் மேலாகவே இருந்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், இதுவரை மொத்தம் ரூ.87,275 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இருப்பினும், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், கிட்டத்தட்ட 76 சதம் அளவுக்கு முதலீடு குறைந்துள்ளது. மேலும், கடந்த அக்டோபரில் பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் ரூ.9,390 கோடி முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில், நவம்பரில் ரூ.2,258 கோடி அளவுக்கே முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Spread the love