January 26, 2023

நவம்பரில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 3 சதம் அதிகரிப்பு: டிஜிசிஏ தகவல்

புது தில்லி, டிச.10

நாட்டின் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த நவம்பர் மாதத்தில் 2.34 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து பொது விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஒழுங்காற்று இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 2021ம் ஆண்டின் நவம்பர் மாதத்தோடு ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டு நவம்பரில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 3 சதம் அதிகரித்து 2.34 கோடியாகவுள்ளதாக தெரிவித்துள்ளது.

எனினும், கொரோனா நெருக்கடிக்கு முந்தைய கடந்த 2019ம் ஆண்டின் நவம்பரோடு ஒப்பிடுகையில், தற்போது உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 7 சதம் சரிந்துள்ளது.

மேலும், 2022 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் விமானப் பயணிகள் போக்குவரத்து 13 சதம் உயர்ந்துள்ளது.

சர்வதேச விமானப் பயணிகள் உள்பட நாட்டின் ஒட்டுமொத்த பயணிகள் எண்ணிக்கை கடந்த நவம்பர் மாதத்தில் 3 சதம் அதிகரித்து 2.83 கோடியாக உள்ளது என்று அந்த டிஜிசிஏ வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Spread the love