February 3, 2023

நமது இந்திய நாட்டின் வரலாறு
மாற்றி எழுதப்பட வேண்டும்
லச்சித் போர்புகானின் பிறந்தநாள் விழாவில் மோடி பேச்சு

புது தில்லி, நவ.25

அந்நியர்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து தியாகம் புரிந்தவர்களின் வரலாறு கற்பிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு ஏற்ப இந்தியாவின் ன் வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

லச்சித் போர்புகானின் 400-வது பிறந்த தின ஓராண்டுகால நிகழ்வின் நிறைவாக புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில்,”லச்சித் போர்புகான் – முகலாயர்களை தடுத்து நிறுத்திய அசாமின் நாயகன்’ என்ற நூலினையும் அவர் வெளியிட்டார். இந்த விழாவில், கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர் வீர் லச்சித் போன்ற தீரமிக்க புதல்வர்களை வழங்கியதற்காக அசாம் பூமிக்கு தமது நன்றியைத் தெரிவித்து உரையைத் தொடங்கினார். “

லச்சித் போர்புகானின் வீரத்திற்கு அவரது 400வது பிறந்த நாளில் நாம் அவருக்கு தலை வணங்குகிறோம். அசாமின் கலாச்சாரத்தை பாதுகாப்பதில் மிக முக்கியமான பங்களிப்பை செய்திருக்கிறார் என்று அவர் கூறினார். 

சுதந்திரத்தின் அமிர்தப்பெருவிழாவை நாடு கொண்டாடும் நேரத்தில் லச்சித் போர்புகானின் 400-வது பிறந்தநாளையும் கொண்டாடுகிறது என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் நிலைத்த கலாச்சாரம், நிலைத்த வீரம், நிலைத்த சகவாழ்வு என்ற மகத்தான பாரம்பரியத்திற்கு இந்த விழாவின் போது, நான் தலைவணங்குகிறேன் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியா தனது கலாச்சார பன்மைத்துவத்தைக் கொண்டாடுவது மட்டுமின்றி வரலாற்றில் அறியப்படாத நாயகர்கள், நாயகிகளையும் அதிகரிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார். லச்சித் போர்புகான் போன்ற பாரதத் தாயின் அழியாப் புகழ் கொண்ட புதல்வர்கள் அமிர்த காலத்தின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு உந்துசக்தியாக விளைங்குகிறார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

லச்சியா போர்புகான் போன்றோரின் அஞ்சாநெஞ்சங்கள் தீவிரவாத மற்றும் பயங்கரவாத சக்திகளின் அழிவுக்கு வழி ஏற்படுத்தின. இந்தியர்களின் வழியாக வாழ்க்கை ஒளி இன்னமும் நிலைபேறு உடையதாக இருக்கிறது என்று அவர் கூறினார்.

அசாமும் வடகிழக்கு மாநிலங்களும் ஒப்பற்ற வீரத்தைக் கொண்டிருந்தன என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த மண்ணின் மக்கள், துருக்கியர்கள், ஆஃப்கானியர்கள், முகலாயர்கள் ஆகியோரைக் கண்டிருக்கிறார்கள் என்றும், பல தருணங்களில் அவர்களை விரட்டியிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். முகலாயர்கள், குவஹாத்தியை கைப்பற்றியபோதும் லச்சித் போர்புகான் போன்றோரின் வீரத்தால் முகலாயர்கள் சக்ரவர்த்திகளின் பிடியிலிருந்து அது விடுதலைப் பெற்றது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் வரலாறு அடிமைத்தனம் பற்றியது மட்டுமல்ல; வளைர்ந்து வரும் வெற்றியைப் பற்றியது, எண்ணற்ற மாமனிதர்களின் வீரத்தைப் பற்றியது, துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகும் அடிமைக்கால சதியால் எழுதப்பட்ட அதே வரலாறு நமக்கு கற்றுத்தரப்பட்டுள்ளைது. சுதந்திரத்திற்கு பின் நம்மை அடிமைப்படுத்திய அந்நியர்கள் பற்றிய தகவல் தொகுப்பில் மாற்றம் செய்திருக்க வேண்டும், ஆனால், அப்படி செய்யப்படவில்லை என்று அவர் கூறினார். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஆக்கிரமிப்பிற்கு எதிரான சீற்றமிக்க போராட்ட வரலாறுகள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளைன. மைய நீரோட்டத்தின் இந்த சம்பவங்கள் சேர்க்கப்படாத தவறுகள் தற்போது சரி செய்யப்படுகின்றன என்றும் பிரதமர் கூறினார்.

நினைவிற்கு எட்டாத காலத்திலிருந்து நமது தேசம் ஞானிகளாலும் துறவிகளாலும் வழிநடத்தப்படுகிறது என்றும் ஒரு தேசம் அதன் உண்மையான கடந்த காலத்தை காணும்போது மட்டுமே அதன் அனுபவங்களிலிருந்து எதிர்காலத்திற்கு சரியான திசையில் அது செல்லமுடியும் என்றும் பிரதமர் கூறினார். நமது வரலாற்று உணர்வு ஒரு சில தசாப்தங்கள் மற்றும் சதாப்தங்களுக்குள் முடக்கப்படாமல் பார்த்துக்கொள்வது நமது பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த வி­யத்தில் பாரத ரத்னா, பூபென் அசாரிகாவை மேற்கோள் காட்டிய பிரதமர், மீண்டும் மீண்டும் சிலவற்றை நினைவுப்படுத்துவதன் மூலமே அடுத்த தலைமுறைக்கு வரலாற்றின் உண்மையான சித்திரத்தை நாம் வழங்கமுடியும் என்றார்.

வளைர்ச்சியடைந்த இந்தியாவை, இந்தியாவின் வளைர்ச்சி மையமாக வடகிழக்கு இந்தியாவை நாம் மாற்றவேண்டியுள்ளைது என்று தெரிவித்த பிரதமர், லச்சித் போர்புகானின் 400-வது பிறந்தநாள் விழாவின் உணர்வு நமது தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் என்றும் இதன் மூலம் நாடு அதன் இலக்குகளை எட்டும் என்றும் தாம் நம்புவதாக கூறியதுடன் தமது உரையை நிறைவு செய்தார்.

Spread the love