November 29, 2022

நடப்பு நிதியாண்டில் 2வது காலாண்டில் சிட்டி யூனியன் வங்கி லாபம் 52 சதம் அதிகரிப்பு

கும்பகோணம், நவ.5

நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில், சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் 52 சதம் வளர்ச்சியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து சிட்டி யூனியன் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.276 கோடியாக இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 52 சதம் அதிகமாகும். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.182 கோடியாக இருந்தது. மேலும், மதிப்பீட்டு மாதங்களில் வங்கியின் செயல்பாட்டு வருவாயும் ரூ.786 கோடியிலிருந்து 15 சதம் உயர்ந்து ரூ.904 கோடியாக உள்ளது.

மேலும், வங்கியின் மொத்த வாராக் கடன் ரூ.2,119 கோடியிலிருந்து ரூ.1,862 கோடியாகக் குறைந்துள்ளது அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love