December 9, 2022

நடப்பு நிதியாண்டில் 2ம் காலாண்டில் என்டிபிசி நிகர மதிப்பு 7 சதமாக குறைவு

புது தில்லி, அக்.31

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தினுடைய ஒருங்கிணைந்த நிகர லாபம் 7 சதம் சரிந்து ரூ. 3,417.67 கோடியாக உள்ளதாக என்டிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவே கடந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ. 3,690.95 கோடியாக இருந்ததாக என்டிபிசி தெரிவித்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், மொத்த வருவாய் ரூ.33,095.67 கோடியிலிருந்து ரூ. 44,681.50 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல, மொத்த செலவுகள் ரூ. 28,949.53 கோடியிலிருந்து ரூ. 40,000.99 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் நிறுவனத்தின் சராசரி மின் கட்டணம் யூனிட்டுக்கு ஒன்றுக்கு ரூ.4.77 ஆக இருந்துள்ளது. இதுவே கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் யூனிட்டுக்கு ஒன்றுக்கு மின் கட்டணம் ரூ. 3.86 ஆக இருந்தது.

நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களின் பயன்பாடு இரண்டாம் காலாண்டில் 69.29 சதத்திலிருந்து 74.08 சதமாக அதிகரித்துள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி விநியோகம் 0.42 எம்எம்டியிலிருந்து 5.58 எம்எம்டி ஆக உயர்ந்துள்ளது. உள்நாட்டு நிலக்கரி விநியோகம் 44.83 எம்எம்டியிலிருந்து 48.72 எம்எம்டி ஆக அதிகரித்துள்ளது என என்டிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love