November 29, 2022

நடப்பாண்டில் 7 சதம் பொருளாதார வளர்ச்சி- ஆர்பிஐ நம்பிக்கை

மும்பை, நவ.21

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சத வளர்ச்சியை எட்ட வாய்ப்பிருப்பதாகவும், இரண்டாவது காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.3 சதமாக வளர்ச்சி காணும் என, ஆர்பிஐயின் மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

இது குறித்து ஆர்பிஐ அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாட்டின் பொருளாதார வளர்ச்சி, இரண்டாவது காலாண்டில், 6.1 – 6.3 சதம் எனும் அளவுக்கு வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய வளர்ச்சி எட்டப்படுமானால், நடப்பு நிதியாண்டில் 7 சத வளர்ச்சியை எட்ட முடியும் என எதிர்பார்க்கலாம்.

மேலும், மூன்றாவது காலாண்டை பொறுத்தவரை, சப்ளை வலுவடைந்துள்ளது. நடப்பு கரீப் பருவ சந்தைப்படுத்தல் காலத்தில், மொத்த அரிசி கொள்முதல், கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி செப்டம்பரில் அதிகரித்துள்ளது. அக்டோபரில் தயாரிப்புத் துறை வளர்ச்சியும் அதிகரித்துள்ளது. கட்டுமானத் துறை, விருந்தோம்பல், பயணம், பொழுதுபோக்கு ஆகிய துறைகள் வளர்ச்சி கண்டு வருகின்றன. இந்திய பொருளாதாரம் நிதானமாக வளர்ச்சியை கண்டு வருகிறது. இவ்வாறு ஆர்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love