November 29, 2022

நடப்பாண்டில் மைசூரு விமான நிலையத்தில் பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பு

மைசூரு, அக்.31

கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு மைசூரு விமான நிலையத்தில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள எட்டு விமான நிலையங்களில், மைசூரு, பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம், மங்களூரு, ஹுப்பள்ளி, பீதர் ஆகிய விமான நிலையங்களில் பயணியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்திய விமான ஆணைய தகவல்படி, 2022 ஆகஸ்ட் நிலவரப்படி, மைசூரு விமான நிலையத்தில் இருந்து கடந்தாண்டு 8,474 பேரும், நடப்பாண்டு 16 ஆயித்து 181 பயணியரும் வந்து சென்றுள்ளனர்.

இது குறித்து விமான நிலைய இயக்குனர் மஞ்சுநாத் தெரிவித்திருப்பதாவது;

கொரோனா தொற்று குறைவு, இரண்டு தடுப்பூசி செலுத்துதல், அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டதால், பயணியர் வருகை அதிகரித்துள்ளது. தொழிலதிபர்கள், டாக்டர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், சுற்றுலா பயணியர், விமான சேவையை பயன்படுத்துகின்றனர். நாள்தோறும் 600 முதல் 700 பயணியர் மைசூரு விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். வரும் நாட்களில் இது மேலும், உயர வாய்ப்புள்ளது.

நடப்பாண்டு ஜூலையில், 23,199 பயணியர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுகளை விட, நடப்பாண்டு எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. விமான நிலைய ஓடுதளத்தின் அளவை அதிகரித்தால், வருங்காலத்தில், விமான நிலையத்துக்கு நன்மதிப்பு உயரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love