September 27, 2022

நடப்பாண்டில் நிலக்கரி இறக்குமதி அதிகரிப்பால் மின்தடை பிரச்னை ஏற்படாது: அலோக் குமார்

புது தில்லி, செப்.16

நடப்பாண்டில் 2 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால், வரும் விழாக் காலங்களில் மின்தடை பிரச்னை ஏற்படாது என மத்திய மின் துறை செயலர் அலோக் குமார் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் செப்டம்பர் மாத இறுதியில் நவராத்திரி விழாக் காலம் தொடங்குகிறது. கடந்த ஆண்டில் விழாக் காலங்களின்போது அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பில் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைக் கருத்தில்கொண்டு நிலக்கரி விநியோகத்தை உயா?த்த மத்திய அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நடப்பாண்டு நிலக்கரி பற்றாக்குறையின் காரணமாக, விழாக் காலங்களில் மின்தடை பிரச்னையை ஏற்படாது. இது வரை 2 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதில் 1.5 கோடி டன் நிலக்கரி பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேவையின் அடிப்படையில் நிலக்கரி இறக்கமதி செய்யப்படும். மின் வாகனங்கள் மற்றும் மின்னேற்ற நிலையங்களுக்கான கட்டமைப்பை ஏற்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மின் விநியோக நிறுவனங்கள், மின் வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையத்தை அமைக்கும்போது தேவையான மின்மாற்றி போன்ற மின் உபகரணங்களுக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை செலவாகிறது என்றார்.

எனவே, மின்னேற்ற நிலையக் கட்டமைப்பை ஏற்பட்டுத்த மின் விநியோக நிறுவனங்களுக்கு மானியம் வழங்கும் வகையில், மின் வாகனம் மற்றும் கலப்பு எரிபொருள் வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான “ஃபேம்’ திட்டத்தை அரசு மறுவரைவு செய்ய உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Spread the love