November 29, 2022

நடப்பாண்டில் நாட்டின் ஸ்மார்ட்போன்களுக்கான சந்தை
10 சதம் வீழ்ச்சி: இன்டர்நேசனல் டேட்டா கார்ப் தகவல்

A Samsung S10 5G smartphone, taken on July 5, 2019. (Photo by Neil Godwin/Future Publishing via Getty Images)

புது தில்லி, நவ.21

நாட்டின் ஸ்மார்ட்போன் சந்தை ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான இன்டர்நேசனல் டேட்டா கார்ப்பரேசன் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் நாட்டின் ஸ்மார்ட்போன்களுக்கான சந்தை 10 சதம் குறைந்து 4.3 கோடியாகியுள்ளது. இது, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும். மேலும், மதிப்பீட்டு காலாண்டில் ஸ்மார்ட்போன்களில் 5ஜி அறிதிறன்பேசிகளின் பங்கு 36 சதத்தை எட்டியுள்ளது. இந்த மாதங்களில் 1.6 கோடி 5ஜி ஸ்மார்ட்போன்களின் வர்த்தகம் நடந்துள்ளது. முந்தைய காலாண்டில் சராசரியாக ரூ.30,600-க்கு விற்பனையான இந்த வகை கைப்பேசிகள், செப்டம்பர் காலாண்டில் சராசரியாக ரூ.32,000-க்கு விற்பனையாகின.

மேலும், ஸ்மார்ட்போன்களுக்கான வாடிக்கையாளர் தேவையில் பணவீக்கம் ஏற்படுத்தும் தாக்கம், சாதாரண கைப்பேசிகளிலிருந்து ஸ்மார்ட்போன்களுக்கு மாறுவதில் வாடிக்கையாளர் காட்டும் வேகம் குறைவது, கைப்பேசிகளின் விலை உயர்வது போன்ற காரணங்களால் 2023ம் ஆண்டில் அறிதிறன்பேசிகளுக்கான சந்தை பாதிக்கப்படும். எனினும், 4ஜி கைப்பேசிகளில் இருந்து 5ஜி தொழில்நுட்ப கைப்பேசிகளுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் மாறுவது அந்தச் சந்தைக்கு சாதமாக அமையும் என்று அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love