October 3, 2022

நடப்பாண்டில் நாட்டின் ஜிடிபி 7 சதமாக சரியும்: ஆசிய வளர்ச்சி வங்கி மதிப்பீடு

புது தில்லி, செப்.22

நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7 சதமாக குறையும் என ஆசிய வளர்ச்சி வங்கி மதிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ஜிடிபி 7.2 சதமாக பதிவாகும் என கணித்த நிலையில், பணவீக்கம், பண நெருக்கடி காரணமாக தற்போது 7 சதமாக குறையும் என ஏடிபி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஏடிபி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பாவது:

2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 13.5 சத வளர்ச்சி கண்டது. இது சேவைத் துறையின் உறுதியான வளர்ச்சியைப் பதிவு செய்தது.
இருப்பினும், விலை அழுத்தமானது உள்நாட்டு நுகர்வின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியதால், மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதத்திலிருந்து 7 சதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல சீன பொருளாதாரம் 5 சதத்துக்கும் மேலாக வளர்ச்சி காணும் என ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 3.3 சதமாக குறைத்து மதிப்பிடப்படுகிறது. கொரோனா பொதுமுடக்கம் உள்ளிட்ட காரணங்களால் சீன பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

Spread the love