December 8, 2022

நடப்பாண்டில் இந்தியத் தேயிலை ஏற்றுமதி 14.03 கோடி கிலோவாக அதிகரிப்பு

புது தில்லி, நவ.18

உலகிலேயே அதிகளவில் தேயிலையை உற்பத்தி செய்யும் நாடான சீனாவுக்கு இந்தியத் தேயிலை ஏற்றுமதி நடப்பு ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவித்திருப்பதாவது:

கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி 14.03 கோடி கிலோவாக இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 12.22 கோடி கிலோவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் காமென்வெல்த் சுதந்திர நாடுகளுக்கான (சிஐஎஸ்) ஏற்றுமதி, கடந்த 2021-ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 3.06 கோடி கிலோவாக இருந்தது. இது, இந்த ஆண்டின் இதே மாதங்களில் ஏறத்தாழ அதே அளவில் 2.91 கோடி கிலோவாக உள்ளது.

சிஐஎஸ் பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம்தான் இந்தியத் தேயிலையின் மிகப்பெரிய இறக்குமதியாளராக இருந்தது. அந்த நாட்டுக்கான தேயிலை ஏற்றுமதி இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் நாடு 2.38 கோடி கிலோவாக உள்ளது. இது, 2021-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 92.7 லட்சம் கிலோவாக இருந்தது. சீனாவுக்கு இந்தியத் தேயிலை ஏற்றுமதி இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சரிந்துள்ளது. மதிப்பீட்டு மாதங்களில் கடந்த ஆண்டு 40.5 லட்சம் கிலோவாக இருந்த தேயிலை ஏற்றுமதி, இந்த ஆண்டு 35.5 லட்சம் கிலோவாகக் குறைந்துள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Spread the love