October 4, 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை
மாவட்டம் ஆட்சியர் ஆய்வு

நாமக்கல், பிப்.10

நாமக்கல் மாவட்டம், பரமத்தி, வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை ஆகிய பேரூராட்சிகளில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள அழியாத மை, வாக்குப்பதிவு எழுது பொருட்கள், பல்வேறு பயன்பாட்டுக்கான உறைகள், ரப்பர் ஸ்டாம்புகள், உள்ளிட்ட பல்வேறு வாக்குபதிவு பொருட்கள் பட்டியலின்படி முழுவதுமாக உள்ளனவா என்று ஆய்வு செய்தார். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் ஆயுதமேந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பாதுகாப்பு அறையின் முன் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதையும் பார்வையிட்டர்.

அதனைத்தொடர்ந்து பாண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வகுப்பறைக்கு சென்று மாணவ, மாணவியர்களுடன் நீண்ட காலம் கழித்து பள்ளிக்கு வருகை தந்துள்ளதால் பள்ளி சூழல் பிடித்திருக்கிறாத என்று கேட்டார், அதற்கு பள்ளி மாணவ, மாணவியர்கள் பிடித்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனார். தினந்தோறும் சத்துணவில் வழங்கப்படும் உணவு வகைகள் குறித்தும், உணவு சுவையாக உள்ளதா என்றும் மாணவ, மாணவியர்களிடம் கேட்டறிந்தார். சத்துணவு கூடத்தில் உணவு சமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது பேரூராட்சி செயல் அலுவலர்கள் / தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பணியாளர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Spread the love