September 27, 2022

தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி

விருதுநகர், செப்.20

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சூலக்கரையில் நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சி வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு 23.09.2022 முதல் மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளில் கலந்துகொள்ள விருப்பமுடையவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பயிற்சியில் இணைந்துக்கொள்ளலாம்.

எனவே விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

Spread the love