September 27, 2022

தொலைத் தொடர்பு சேவைகளுக்கான
கட்டணம் உயரக்கூடும்: ஏர்டெல் தகவல்

புது தில்லி, பிப்.10

அடுத்த ஆண்டில் தங்களது தொலைத் தொடர்பு சேவைகளுக்கான கட்டணம் உயரக்கூடும் என்று பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஏர்டெல் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான நிர்வாக இயக்குநரும் தலைமை செயலதிகாரியுமான கோபால் விட்டல் தெரிவித்துள்ளதாவது:

2022ம் ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் ஏர்டெல் கட்டணங்கள் அதிகரிப்பதை எதிர்பார்க்கலாம். கட்டண உயர்வு இன்னும் 3 அல்லது 4 மாதங்களிலேயே இருக்கும் என்று யாரும் அஞ்ச வேண்டாம். காரணம், எங்களது சிம் கார்டுகளின் விற்பனை அதிகரிப்பதற்கும் வருவாய் வளர்சியை எட்டுவதற்குமே தற்போது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இருந்தாலும், இன்னொரு கட்டண உயர்வு நிச்சயம் இருக்கும். ஏற்கெனவே பல முறை செய்தது போல, கட்டணங்களை உயர்த்த மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக இருக்க நாங்கள் ஒருபோதும் தயங்கமாட்டோம் என்றார் அவர். ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் நிறுவனம் பெறுவதற்காக நிர்ணயித்துள்ள சராசரி வருவாய் இலக்கு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் ரூ.163-ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. முந்தைய ஆண்டின் அதே காலக்கட்டத்தோடு ஒப்பிடுகையில் அது 2.2 சதம் குறைவாகும். இந்நிலையில், இந்த ஆண்டு ஏஆர்பியு வருவாய் இலக்கை ரூ.200-ஆக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே, 2022ம் ஆண்டில் பார்தி ஏர்டெல்லின் தொலைத் தொடர்பு சேவைக் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love