October 4, 2022

தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான
இரண்டாம் கட்ட பயிற்சி: ஆட்சியர் ஆய்வு

மதுரை, பிப்.10

மதுரை மாவட்டம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர், வாடிப்பட்டி தாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட பயிற்சியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள் என மொத்தம் 322 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் வாக்குப்பதிவிற்காக மொத்தம் 1,615 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குப்பதிவை சுமூகமான முறையில் நடத்திட ஏதுவாக 7,760 தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த அலுவலர்களுக்கு 9 இடங்களில் 16 மையங்களில் மூன்று கட்ட தேர்தல் பயிற்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, 31.01.2022-அன்று முதல் கட்ட தேர்தல் பயிற்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து, இன்றைய தினம் (10.02.2022) இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில், மாவட்ட தேர்தல் அலுவலர்ஃ மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சியினை நேரில் ஆய்வு செய்தார்.

குறிப்பாக, இந்த பயிற்சியின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறை, தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான படிவங்களை கையாளும் முறை, மாதிரி வாக்குப்பதிவு, தேர்தல் வாக்குப்பதிவு விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. தேர்தல் பயிற்சியை ஆய்வு செய்த மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பாக நடத்தப்படும் மூன்று கட்ட தேர்தல் பயிற்சிகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.மேலும், தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 17.02.2022-அன்று மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி நடத்தப்படும் என தெரிவித்தார்.

Spread the love