September 27, 2022

தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற 1130 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.16.28 கோடி ஊக்கத்தொகை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, செப்.12

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைடுபற்ற விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குகின்ற 19 வீரர்,வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் நடுவர்களுக்கு முதலமைச்சர் விருதினையும், அதற்கான ஊக்கத்தொகையாக 16 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற 1130 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 16 கோடியே 28 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்.

சிறந்த விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் நடுவர்களுக்கு முதலமைச்சர் விருதுகள்

பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு, பதக்கங்கள் இவன்றதற்காக 2018-19 மற்றும் 2019-20ஆம் ஆண்டுகளுக்கான 8 சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், 4 பயிற்றுநர்கள், 4 உடற்பயிற்சி இயக்குநர்கள் / உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் 3 நடுவர்கள், என டமொத்தம் 19 நபர்களுக்கு முதலமைச்சர் விருதுகளையும், விருதிற்கான ஊக்கத்தொகையாக 16 இலட்சத்து 30ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி வாழ்த்தினார்.

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற விளையாட்டூ வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை

கடந்த 2019-2020 ஆம் ஆண்டு நடைடுபற்ற 65-வது தேசிய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளில் 14 வயது, 17 வயது மற்றும் 19 வயதிற்குட்பட்டோர் என 3 பிரிவுகளில் பதக்கங்கள் வென்ற 659 மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 7 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள்; கடந்த 2019-2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான சப்-ஜுனியர், ஜுனியர், இளையோருர் மற்றும் சீனியர் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் இவன்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 291 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகையாக 5 கோடியே 93 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்; கடந்த 66.4.2022 முதல் 17.4.2022 வரை மத்திய பிரதேசத்தில், போபால் நகரில் நடைபெற்ற 12-வது தேசிய அளவிலான சீனியர் ஹாக்கி சாம்பியன்´ப் குழுப்போட்டிகளில் இவள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 18 விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை 27 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள்; கடந்த 23.10.2019 முதல் 27.10.2019 வரை தென் கொரியாவில், சுங்ஜுவில் நடைபெற்ற ஆசிய ரோயிங் சாம்பியன்´ப் போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்ற லட்சுமணன் ரோ´த் மாடப்பாவுக்கு ஊக்கத் தொகையாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை; கடந்த 19.3.2021 முதல் 21.3.2021 வரை உத்தரகாண்டில் நடைபெற்ற பெண்களுக்கான 31-வது தேசிய அளவிலான சீனியர் ஃபென்சிங் சாம்பியன்´ப் குழுப்போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 4 விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் 4 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள்; 2022ம் ஆண்டிற்கான சதுரங்க விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த வி.எஸ். ராகுலுக்கு 3 லட்சம் ரூபாய்க்கான காசோலை; கடந்த 4.11.2021 முதல் 13.11.2021 வரை கொலம்பியவில், இபாகு- டோலிமாவில் நடைபெற்ற இன்லைன் ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்´ப்பில் ஜுனியர் ஆண்கள் 15 கீ.மீ. எலிமினேசன் விளையாட்டுப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் இவன்ற தமிழ்நாட்டைச் சார்ந்த ஆனந்த்குமார் வேல்குமாருக்கு ஊக்கத் தொகையாக 4 லட்சம் ரூபாய்க்கான காசோலை; கடந்த 2019-2020ம் ஆண்டிற்கான அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த 144 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகையாக 2 கோடியே 13 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்; கடந்த 2017 மற்றும் 2020 ஆம் ஆண்டிற்கான சதுரங்க விளையாட்டில் பபண்கள் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த செல்வி. ஸ்ரீஜா சேஷாத்திரி மற்றும் கே. பிரியங்கா ஆகியோருக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் மொத்தம் 6 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள்:

கடந்த 2016, 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான சதுரங்க விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த ஆர். பிரக்ஞானந்தா, ப. இனியன், எல்.ஆர். ஸ்ரூஹரி ஆகிய 3 நபர்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் மொத்தம் 9 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள்; கடந்த 28.9.2021 முதல் 5.10.2021 வரை தோஹாவில் நடைடுபற்ற 25-வது ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்´ப் போட்டிகளில் ஜி. சத்தியன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் 1 வெண்கலப்பதக்கம் மற்றும் ஆண்கள் குழுப்போட்டியில் 1 வண்கலப்பதக்கம் இவன்றதற்கு ரூ.10 இலட்சம், திரு.சாத்கமல் அவர்கள் ஆண்கள் இரட்டையர் பிரிவில் 1 இவண்கலப்பதக்கம் மற்றும் ஆண்கள் குழுப்போட்டியில் 1 வெண்கலப்பதக்கம் வென்றதற்கு ரூ.10 இலட்சம், என மாத்தம் 2 நபர்களுக்கு 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள்; கடந்த 11.10.2021 முதல் 7.10.2021 வரை உஸ்பெகிஸ்தானில் தாஷ்கண்டில் நடைடுபற்ற 12-வது உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடற்தகுதி விளையாட்டு சாம்பியன்´ப் போட்டிகளில் பதக்கம் இவன்ற ஜி. குமார் 75 கிலோ எடைபிரிவில் டவள்ளிப்பதக்கம் இவன்றதற்கு ரூ.15 இலட்சம், ஆர். பபெஞ்சமின் ஜெரோட் 65 கிலோ எடைபிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றதற்கு ரூ.10 லட்சம் மற்றும் ஆர். கார்த்திகேஸ்வர் 85 கிலோ எடைபிரிவில் இவண்கலப்பதக்கம் வென்றதற்கு ரூ.10 இலட்சம், என மொத்தம் 3 நபர்களுக்கு ஊக்கத் தொகையாக 35 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள்; கடந்த 9.2.2020 முதல் 15.2.2020 வரை சென்னையில் நடைபெற்ற 77-வது தேசிய ஸ்சூவாஷ் சாம்பியன்´ப் போட்டியில் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற ஜோஷ்னா சின்னப்பாவுக்கு ஊக்கத்தொகையாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை; என மொத்தம் 16 கோடியே 28 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை 1130 விளையாட்டு வீர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக முதல்வர் வழங்கி வாழ்த்தினார்.

Spread the love