November 29, 2022

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஆட்சியர் தலைமையில் அலுவலர்கள் ஏற்பு

மதுரை, அக்.31

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி மற்றும் ஊழல் கண்காணிப்பு மற்றும் விழிப்புனர்வு உறுதிமொழி எத்துக்கொண்டனர்.

இந்திய தேசத்தின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் அக்டோபர் 31, 1875-ஆம் ஆண்டு பிறந்தார்.

இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்டவர். சுதந்திர இந்தியா பல மாகாணங்களாகவும் சமஸ்தானங்களாகவும் பிரிந்து கிடந்த நேரத்தில் அனைத்தையும் ஒன்றுபடுத்தி ஒருங்கிணைந்த இந்தியாவாக உருவாக்கியவர். அன்னாரது பிறந்தநாள் தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் நேர்மையான வெளிப்படை தன்மையுடன் செயல்படும் அரசு நிர்வாகம் என்ற நோக்கத்தை வலியுறுத்தும் விதமாக அக்டோபர் 31-ஆம் நாள் முதல் ஒரு வார காலம் ஊழல் கண்காணிப்பு மற்றும் விழிப்புனர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி மற்றும் ஊழல் கண்காணிப்பு மற்றும் விழிப்புனர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Spread the love